கிஞ்சுகமே நீ என் அஞ்சுகமே 1

Kee1

கிஞ்சுகமே நீ என் அஞ்சுகமே 1

1 கிஞ்சுகமே நீ என்  அஞ்சுகமே!!! 

கிஞ்சுகம்_ முண்முருக்குமரம், கிளைகள் எங்கும் முட்கள் அடர்ந்து இருக்கும்  முள் மரம் 

அஞ்சுகம்_ கிளி

முதல் பாகம் எகினமே ஏன் பிழையானாய்??

மஞ்சபாளையம்  

அரசுவின் வீடு !! 

அரசுவின் போன் கீர் கீர் என்று அதிர   சாப்பாடு பரிமாறி கொண்டிருந்த நாயகி போனை எடுக்க போக , 

"நீ காஞ்ச தோசை ரெண்டை போட்டு வை,  நான்  யாருன்னு பார்க்கிறேன் .. 

"ம்க்கும் வேற யாரா இருக்கும், நீங்க பெக்காத உங்க மூத்த மகளாத்தான் இருக்கும் ,  என்ற நாயகி  அரசு  போனை  பிடுங்கி காதில் வைத்து 

"ஹலோ பூர்வி நான் நாயகி பேசுறேன்,  அப்பக்கம் தங்கை  சத்தமே இல்லை .. 

"ஹலோ ஹலோ "

"ப்ச் கொடுடி போனை,  அதான் அவ பேச மாட்டான்னு தெரியுதுல்ல...  எதுக்கு அவ போனை எடுக்கிற பிறகு உட்கார்ந்து அழுவுற "என்று அரசு போனை பிடிங்கினான்...

தங்கை நிராகரிப்பு எப்போதும் வலிக்க தான்  செய்யும் ... என்ன தணிந்து போனாலும் எட்டியே பார்க்காது போகும் தங்கையை கண்டு மனது வலித்தாலும் , அரசுவோடு உரிமையாக பேசும் போது அவர்கிட்டயாவது பேசுறாளே என நிம்மதி தான் .. 

"ஹலோ ஓஓஓ "அரசு சத்தம் கேட்ட அடுத்த நொடி 

"அத்தான்"  இந்த  உலகில் அவள் ஒருவனை மதிக்கிறாள் என்னால் அது அரசு தான்... தவறு செய்ய வாய்ப்பு கிடைக்குமா??  என்ற ஆண்கள் மத்தியில்,  அவனை தேடி போய் தொல்லை  செய்த போதினிலும் ... நீ என் மகள் !! என்ற உத்தமன்  மீது பெரும் மதிப்பு கூடி போனது ... 

அவள் நாயகியின் தங்கை பூர்விகாதேவி!!  

""சொல்லுத்தா, எப்படி இருக்க ? 

ம்ம் 

"எங்கிட்டு இருக்க??

ஊர்லதான் அத்தான் 

"வீட்டு பக்கம் வந்துட்டு போத்த" 

"வாசல்ல தான் நிக்கிறேன் "

"உள்ள வர என்னத்தா,  யாரோ போல நிக்குத வா உள்ளார ..."ஓடி வந்து அரசு கதவை திறக்க வாசலில் நின்றாள் பூர்வி 

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து  உடல் நிலை தேறி அரசு முன்தான் பூர்விகா நின்றாள்..  நாயகி பயந்து போய் தங்கையை பார்க்க ... 

"என்னத்தா என்ன வேணும்..  வா சாப்பிட்டியா?  புள்ள அவளுக்கு சோறு போட்டு கொண்டு வா" என்று நாயகிக்கு கண்ணை காட்ட..  நாயகி உணவு தட்டோடு வந்து அதை தங்கை கையில் கொடுக்க பூர்வி அதை வாங்காது இருக்கவும்  , அரசு வாங்கி அவள் கையில் கொடுத்தான் ... 

இன்னும் அவளுக்குள் பல வடு உண்டு,  அது ஆற பல நாள் ஆகலாம் என்றது அவள் பாரா முகம் ... 

என்னதான் தாய் தகப்பன்,  அக்கா என அன்பை கொடுக்க காத்து நின்றாலும் ... அன்னைக்கு தர கசந்தது , இன்றைக்கு அது எனக்கு வேண்டாம் என்று அவர்கள் கரிசனை,  அன்பு எதையும் பூர்விகா வாங்கி கொள்வது இல்லை ... அன்பை கேட்டு வாங்கும் ஈனப்பிறவியா நான் என்று வீம்பாக அவர்களை பார்ப்பதை கூட தவிர்க்கிறாள்... 

இந்தா சாப்பிடுத்தா என்று அரசு  கொடுக்கவும் அதை வாங்கி படபடவென உண்ண ஆரம்பிக்க நாயகிக்கு கண்ணீர் கட்டி விட்டது ... 

"புள்ள உள்ளார போய் புள்ளைங்களை பாரு , அவள் பாவமாக புருஷனை பார்க்க 

"போன்னு சொன்னேன் "என்ற அவன் கண்டிப்பு குரலில் நாயகி உள்ளே போய்விட ... 

"என்னத்தா?  

"அ....த்...தான்  தயங்கி தலை குனிந்து நின்றாள் உலகம் அவளை லூசு, சைக்கோ மெண்டல் என ஆயிரம் பெயர்  தங்கள் இஷட்டப்படி வைத்து விட்டது ... 

கட்டுன தாலியை கழட்டி போட்டுட்டு,  போகுது பாரு திமிர் எடுத்த நாய் , இவளை வச்சி இனி என்ன செய்ய என்று தாய் கூட கோவத்தில் கத்தி இருக்கிறார்.. ஊரே,  இந்த பைத்தியகார பொண்ணுக்கு தாலி கட்டி அப்படியே விட்டுட்டு போயிட்டான் அந்த பையன் .. 

பின்ன இது கூட வாழ முடியுமா  என்று அது அவள் காதலிலும் கேட்க வில்லை,  தாலியை கட்டிய அவன் காதில் கேட்கும் தொலைவிலும் அவன் இல்லை .... இவளும் அவனை இன்றுவரை நினைக்கவும் இல்லை ... 

"சொல்லுத்தா,  என்ன படிக்கணும்? " அரசு முன் உதவி கேட்டு தயங்கிய அவள்முகத்தில்  , ஏதோ ஒன்று மின்னி மறைந்தது சொல்லாது தன் மனம் புரிந்த அவன் கேள்வியில்...

"டான்ஸ் கிளாஸ் போகணும் அத்தான்...  என்றாள் அமைதியான குரலில்

"ஓஓஓ டாக்டர் இஞ்சினியர்,  அது மாதிரி வேண்டாமாத்தா "

"ம்ஹும் டான்ஸ் தான் படிக்கணும் அத்தான் .. 

சரித்தா படி என சகலமும் பார்த்து கொண்டான்..  பூர்வி சென்னையில் நடன பள்ளியில் படித்து மூன்று வருடம் கழித்து மறுபடியும் அதே போல அரசு முன் நின்றாள் ..   இதுவரை சாமியை நேரில் காண ஆசை கொண்டது இல்லை எனெனில் பூர்வியை பொறுத்தவரை தன் ஆசைக்கு எல்லாம் வண்ணம் கொடுக்கும் அரசு தான் சாமி,  தகப்பன் அத்தனையும் ...

"அத்தான் .. 

"கல்யாணத்துக்கு இதுல மாப்பிள்ளை போட்டோ இருக்கு யார் வேணும்னு பாருத்தா" அரசு பல போட்டோவை அவள் முன் போட..  அதை கையில் ஏன் எடுக்க போகிறாள் பூர்வி .. 

"எனக்கு கல்யாணம் வேண்டாம் மறுத்த அவளை அரசு கண்ணை சுருக்கி பார்த்தான் 

"சரித்தா உடனே ஒப்புகொண்டவன்..

"இப்ப கல்யாணம் வேண்டாமா இல்லை எப்பவுமே வேண்டாமாத்தா 

"எனக்கு ஆம்பளைங்கள கண்டாலே பிடிக்கல பதில் தலையை குனிந்து கொண்டே வர ...

"நானும் ஆம்பளதான்த்தா "

"என் அம்மாவாதான் நீங்க தெரிஞ்சிருக்கீங்க? 

"என்னத்தா வேணும்?? நாலு வார்த்தை அவள் வாயில் புடுங்கும் முன் அரசவுக்கு நாக்கு தள்ளி விடும் .. 

"டான்ஸ்ல மேல படிக்கணும்.. 

"சரித்தா பண்ணு ... புள்ள இஇஇ 

'"மாமா நாயகி உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.. 

" உலகத்துல எங்கன பெரிய டான்ஸ் பள்ளிக்கூடம் இருக்குன்னு பாரு .. 

"பாரீஸ்ல ஓப்ரா பளேட்னு ஒரு டான்ஸ் ஸீகூல் இருக்கு மாமா,  நாயகி பதில் உள்ளிருந்து வர 

"இல்லை நான் இங்கேயே எங்கையாவது படிக்கேன் அத்தான்" என  பூர்விகா மறுக்க 

"ப்ச்,  நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை படித்தா விரும்பிட்டல்ல... கண்கள் கலங்க அவள்  பார்த்த பார்வையில் ஆயிரம் நன்றிகள் குவிந்து கிடக்கும் ... 

தகப்பன் இருந்தால் தான் கனவு மெய்யாகுமா என்ன?  தகப்பன் ஸ்தானத்தில் அரசு அவள் கனவு படிப்பை படிக்க வைக்க பாரீஸ் அனுப்பினான்..

தகப்பன் அவள்  கனவை மட்டும் அறிந்திருக்க மாட்டானே,அவள்  எதிர்காலத்தையும் அல்லவா கணித்து வைத்திருப்பான். 

ஏர்போர்டில் அரசுவுக்கு கை ஆட்டி கொண்டு போகும் பூர்விகாவை நமட்டு சிரிப்போடு பார்த்து சிரித்தபடி  அரசு மீசையை முறுக்கிட அதை கண்ட நாயகி 

"என்ன மாமா உங்க சிரிப்பே தினுசா இருக்கு நாயகி கணவன்  குசும்பு சிரிப்பில் யோசனையாக அவனை பார்க்க 

"கூடிய விரைவில் புரியும்,  பராக்கு பார்க்காம வா புள்ள " என்று மனைவியை இழுத்து கொண்டு  செல்ல.. 

அரசு வைத்த குறி எப்போதும் தப்பாது, தப்பாகாதே பூர்விகா வாழ்க்கையிலும் தப்பாகாது.. 

அதிகாரி பாஸ்போர்ட் கேட்கவும் ... பாஸ்போர்ட் தேட , பூர்வி தன் பேக் உள்ளே கைவிட ஏதோ நீளமாக ஒன்று அவள் கையில் அகப்பட, பூர்வி அதே எடுத்து பார்க்க மஞ்சள் நிற கயிறு .... பூர்வி யோசனையாக அதை தூக்கி பார்க்க ரெட்டை கிளிகள் கொஞ்சவது போல முகப்பத்தாலி தங்கத்தில் தொங்கியது 

ஆம் !!! அன்று அசோக் கட்டிய திருமாங்கல்யம் அது 

இது?  என்று யோசித்த பூர்விக்கு ஒரு நொடி என்றாலும் கழுத்தில் ஏறி இறங்கிய அந்த தாலியின் வடிவம் மூளையில் பொறி தட்ட ..

இது எப்படி என் பேக் உள்ள??  என்று யோசனையாக தலையை வருட... காரில் வரும் போது நாயகி அவள பேக்கை மடியில் வைத்தது நியாபகம் வர 

"வேணும்னே பண்ணி இருப்பா,  அத்தானுக்காக உன்ன விடுறேன் என்று அதை மறுபடியும் வீச குப்பை தொட்டி தேட

"பூர்விகா தேவி என்று அவள் முன் இருந்த அதிகாரி அழைக்கவும்..

"ஹான் எஸ் சார் என்று ஆவணங்களை சரி பார்த்து விட்டு நிற்க நேரம் இல்லாது உள்ளே ஓட .. லக்கேஜ் பரிசோதனை செய்யும் இடத்தில் மாங்கல்யம் அகப்பட 

"வாட் இஸ் திஸ்.... 

"அது அது ...அவள் திணறவும்,அவளை மட்டும் ஓரம் கட்டி செக்கிங் பண்ணி அது தாலிதான் பிரச்சனை இல்லை என முடிவுக்கு வந்து

"கழுத்துல போடுங்க  பேக்ல எல்லாம் வச்சி கொண்டு போக கூடாது "என்ற அதிகாரியை எதிர்க்க முடிறாது  அன்று அவள் கையால் அத்து வீசப்பட்ட தாலி மறுபடியும் பல வருடம் கழித்து அவள் கழுத்தில் ஏறியது ... 

மாங்கல்ய பந்தம் அவளை துரத்த போவது தெரியாது விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.... 

முற்று இல்லை இனிதான் அவள் வாழ்க்கை தொடக்கம் ஆரம்பம் ஆக போகிறது ....

பாரீஸ் 

பாரீஸில் ஜிம் ஒன்றில் உடலில் வியர்வை ஓட எடைக்கற்களை தூக்கி கொண்டிருந்தான் ஒருவன்..

அவன்  ஐபோன் நாக்குமூக்கா நாக்குமுக்கா என்று அலற...  அத்தனை பேரும் அவனை திரும்பி பார்க்க தோளை உலுக்கி  கொண்டு போனை எடுத்து காதில் வைத்து கொண்டே ரெஸ்ட் ரூம் சென்று மழை பெய்தபடி போனை ஆன் செய்தான் 

"யா "

"சார் ..என்ன பண்றீங்க சார் ?

"சூச்சா இருந்துட்டு இருக்கேன்,  ஓவரா தண்ணீ குடிச்சிட்டேன் போல போயிட்டே இருக்கு 

சார் சார் என்ன சார் இதெல்லாம் போய் சொல்லிக்கிட்டு அங்கு உள்ளவன் கதற... 

"நீதான கேட்ட இப்ப ஜீப்பை போட போறேன் வேற எதாவது இன்பர்மேஷன் வேணுமா ? க்ரீச் என்ன சத்தம் வேறு வந்தது ...

"இல்லை சார் இல்லை சார் .."

"அது !!என்ன விஷயம்? தன் பேக்கை தூக்கி தோளில் போட்டு கொண்டு அவன் நீள் எட்டு எடுத்து வைத்து தன் காரை நோக்கி போனான் ...அவன் ஜூனியர் வாசலில் நின்றான் ... 

"சார் அரசு சார் உங்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதான் எப்போ ப்ரீன்னு கேட்க போன் போட்டேன் 

"இடியட் !! அவர் போன் போட்டா காக்க வைப்பியா மேன் ..

"சாரி சார் ...இந்தாங்க என போனை கொடுக்க காரில் சாய்ந்து நின்று அரசின் பேச்சுக்கு செவி மடுத்தான் 

அசோக் அனவர்தன் !! வயது 29 

புகழ்பெற்ற நடன ஆசிரியர் , பாரீஸ் ஓப்ரா பளேட் 

அன்று தெரியாத்தனமா பூர்வி கழுத்தில் ஒற்றை தாலி கட்டி வாழ்க்கை அம்போ ஆகி நடுரோட்டில் நிற்கும் சிங்கிள் ஆசாமி !!

முள் செடியில் அமர போவது அஞ்சுகமோ,  இல்லை  அரிமாவோ?? 

முதல் பாகம் எகினம் அரசு நாயகி, கதை மறந்த செல்லோஸ் ரீகேப் பண்ணிக்கலாம் 

அதன் ஆடியோ லிங்க் 

https://youtu.be/iEkqg21PMN0?si=ksB50Vy0E0iAIFF4

கிஞ்சுகம் ,இந்த  கதையின் ஆடியோ லிங்க்

https://youtu.be/Piz68Ae9ljo?si=oHuL9qJl5SOPbDom